நடந்து முடிந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னிடம் அர்ஜென்ரீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அர்ஜென்ரீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நேற்று (19) நள்ளிரவு திடீரென, இரசிகர்களுக்கும், பொலிஸாருக்குமிடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், இரசிகர்கள் புகழ்பெற்ற ஒபெலிஸ்க் நினைவுச் சின்னத்தின் பாதுகாப்பை மீற முயன்ற காரணத்தினால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இரசிகர்கள் போத்தல்களைகளை வீசித் தாக்கியதால், பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
இம்மோதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் என்சோ பெர்னாண்டஸ் வெளியேற்றப்பட்டதால் ஆர்ஜென்டினா பின்னடைவைச் சந்தித்தது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் பெர்ரான் டோரஸ் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஆட்டம் முடிந்த பின் வீரர்களுக்கு இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தோல்விக்கு மத்தியிலும், ஆர்ஜென்டரீனா அணி இறுதிப் போட்டி வரை அடைந்த சாதனையை முன்னிட்டு அந்நாட்டு ஜனாதிபதி ஜாவியர் மிலே தேசிய விடுமுறை அறிவித்துள்ளார். கொண்டாட்டத்திற்கான திகதியை வீரர்களும் பயிற்சியாளர்களும் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
