உக்ரைனில் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 09 மாலுமிகள் உட்பட 10 பேர் பலி

உக்ரைன் நகரமான ஒடெசாவின் கடற்கரைக்கு அப்பால் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கினியா-பிசாவ் கொடியை ஏந்திச் சென்ற கப்பல் மீது ரஷ்யா குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஒன்பது மாலுமிகளும், விமானி ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில், ஒடெசா பகுதி தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

இப்பகுதியில் ஜுலை மாதம் மட்டும் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக ஆளுநர் ஓலே கிப்பர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கருங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான ரஷ்யத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles