மகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ என்பவரின் தரப்பு ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் தடுப்புக்காவல் கைதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலில் படுகாயமடைந்த முகமது அஸ்மான் ஷெரீப்தீன் என்ற கைதி, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
