ஸ்பெய்னின் தெற்கு கிரனாடா மாகாணத்தில் இன்று 4 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன்போது மூன்று பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்றும், அதன் மையப்புள்ளி கிரனாடா நகருக்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அல்ஹம்ப்ரா Alhambra வளாகத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை அதிகாரிகள் தடைசெய்தனர்.
அதே நேரத்தில் கிரனாடா Granada மாகாண நிர்வாகம் நிர்வாகக் கட்டடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
