போலந்தை உலுக்கிய கடும் புயல் காரணமாக சுமார் 19,400 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்தை நேற்று இரவு முதல் தீவிர புயல் தாக்கியுள்ளதாகவும், பல மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புயல் தொடர்பாக சுமார் 4,000 அழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு முதல், விழுந்த மரங்களை அகற்றுவதற்கும், சேதமடைந்த கூரைகளைப் பாதுகாப்பதற்கும், வெள்ளம் சூழ்ந்த தெருக்கள் மற்றும் கட்டிடங்களிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த புயல் காற்று மற்றும் வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அபாயகரமான வானிலை நிகழ்வுகளின் விளைவுகளைச் சமாளிப்பதில் பொது நிர்வாகம் மற்றும் அவசரகால சேவைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, உயர் படைகள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
