நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்ககால் 8 பேர் பலி!

திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கப் புதன்கிழமை ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லையின் மறுபக்கத்தில், சீனா – நேபாள இடையிலான நில எல்லையைக் சேற்றுச் சரிவு தாக்கியதில் திபெத்தின் கியிராங் பகுதியில் “பெரும் உயிரிழப்புகளும்” பலர் காணாமல் போயுள்ளதாகவும் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 50,000 மக்கள் வாழும் ரசுவா  மாவட்டத்தில் உள்ள சியாப்ரு பெசி  மற்றும் திமுரே   ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் மட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால் ஹெலிகொப்டர்களைத் தரை இறக்க முடியவில்லையெனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த திடீர் வெள்ளத்தால் 430 மெகாவாட் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நேபாள எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தியில் 12 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

பிராந்தியத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவக் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் மீட்புக் குழுக்களுடன் இணைந்துள்ளதாகப் பிரதமர் பலேந்திர ஷா (Balendra Shah) தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles