சுவிட்ஸர்லாந்தின் ஆரவ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆரவ் நகரில் உள்ள குதிரைப்பந்தைய மைதானத்தில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
22 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும், 24 முதல் 27 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி தப்பியோடியுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதேநேரம் தாக்குதலுக்கான சூழ்நிலை மற்றும் பின்னணியை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
