கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000ஐ கடந்தது

கொங்கோவில் எபோலா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விட, நோய் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது.

சமீபத்திய அரசுத் தரவுகளின்படி, 6,100 இற்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 3,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோ சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, மே மாத மத்தியில் இது உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, 6,186 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும், 3,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

வரலாற்றிலேயே மிக வேகமாக பரவும் எபோலா பாதிப்பாக இது நீடிக்கிறது. நோய்த்தொற்றின் பரவல் வேகம் மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் “நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டவில்லை” என்றும், பல சுகாதார மண்டலங்களில் நோய் வேகமாகப் பரவுவது “நோய்த்தொற்றின் கட்டுப்பாடற்ற பரவலை” குறிக்கிறது என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles