தைவான் நீரிணையில் ஏற்படும் மோதல் 02ஆம் உலகப் போரை விட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!

தாய்வான் நீரிணைப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு மோதலும் இரண்டாம் உலகப் போரை விட உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாய்பே நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய, தாய்வானில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் (American Institute in Taiwan) இயக்குனர் ரேமண்ட் கிரீன், இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வரவிருக்கும் அமெரிக்க-சீன உச்சிமாநாடு தகவறான கணிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தாய்வான் நீரிணையில் அமைதியை நிலைநாட்டுவதை விட காலத்திற்கேற்ற அல்லது முக்கியமான வேறெந்த விஷயமும் இல்லை என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியைப் பாதுகாப்பதை அமெரிக்கா தனது மிக முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles