கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்கள் விலை உலகமெங்கும் உயர்ந்துவருகிறது.
இந்நிலையில், கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக, குளிர் காலத்தில் கனேடியர்களும் அமெரிக்கர்களும் பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துவிடுகிறார்கள்.
ஆகவே, வாகன பயன்பாடு குறைவதால், எரிபொருள் நிரப்புவதற்கான தேவையும் குறைகிறது.
இரண்டாவதாக, கனடாவைப் பொருத்தவரை, குளிர்காலம் துவங்கியதும் வாகன எரிபொருளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படும்.
குளிர்காலத்தில் வாகன செயல்பாடு நன்றாக இருப்பதற்காக, எரிபொருளுடன் பியூட்டேன் போன்ற உட்பொருட்கள் கலக்கப்படுகின்றன.
இந்த பியூட்டேன் போன்றவை கலக்கப்படும் எரிபொருள் விலை, வழக்கமாகவே குறைவாகத்தான் இருக்கும்.
ஆக, இந்த இரண்டு காரணங்களாலும், எரிபொருள் விலைகள் குறைய உள்ளன.
இந்த விலை குறைவு, இம்மாதம், அதாவது, செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வர அமுலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
