நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக இலங்கை வம்சாவளி பெண் நியமனம்

இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்ரெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார்.

19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.

தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.

அரசியல் செய்திகளை வாசி கம்சியின் இந்த உயர்வு, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான புதிய கட்டமாகவும், நோர்வே வாழ் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles