FIFA நடுவராக ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம்

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தைப் பெற்ற பின்னர் சர்வதேச அரங்கில் தனது பயணத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.

ஸ்பெயினின் முன்னணி கால்பந்து அணியான FC Barcelona பங்கேற்ற இந்தப் போட்டியில் உலகின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லமீன் யமாலும் களமிறங்கியிருந்த நிலையில், போட்டியை நிர்வகிக்கும் பொறுப்பு அனோஜன் கனகசிங்கத்துக்கு வழங்கப்பட்டது.

சுவிற்சர்லாந்து கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, 1994ஆம் ஆண்டு பிறந்த அனோஜென் கனகசிங்கம், SC Ittigen கழகத்தைச் சேர்ந்தவர்.

2026ஆம் ஆண்டுக்கான FIFA நடுவர்கள் பட்டியலில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் Super League போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் நடுவராகப் பணியாற்றி வந்த அவர், அதுவரை நாட்டின் உயர்மட்டப் பிரிவில் 34 போட்டிகளை நிர்வகித்திருந்தார்.

சர்வதேச அரங்கிலும் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2026 ஜூலை 16ஆம் திகதி நடைபெற்ற UEFA Europa League தகுதிச்சுற்றுப் போட்டியில் NK Aluminij மற்றும் FC Sheriff Tiraspol அணிகள் மோதிய ஆட்டத்திற்கு அனோஜன் கனகசிங்கமே பிரதான நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார்

ஈழத்தமிழ் பின்னணியைக் கொண்ட அனோஜன் கனகசிங்கம், சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்திலிருந்து ஐரோப்பிய மற்றும் தற்போது FIFA சர்வதேச அரங்கிற்கு முன்னேறியிருப்பது, தமிழ் சமூகத்திற்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles