விமானத்தை மோதச் செய்வதே இலக்கு – ‘ஃப்ளை-துபாய்’ துணை விமானி வாக்குமூலம்

இஸ்ரேல் வான்பரப்பில் எங்காவது ஒரு இடத்தில் விமானத்தை வேண்டுமென்றே மோதச் செய்வதே தனது நோக்கம் என்று ‘ஃப்ளை-துபாய் துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் நோக்கிச் சென்ற ‘ஃப்ளை-துபாய்’ (FlyDubai) விமானத்தின் விமானியை தாக்கிய துணை விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் 29 வயதான ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி Hamam Al Hammami, என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு ‘ஓமன் ஏர்’ (Oman Air) நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ​​பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு விமானப் பணிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை குறித்த விவரங்களை அறிந்த பல அதிகாரிகள் ஏபிசி செய்தி சேவையிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய , 2024-ஆம் ஆண்டில் ‘ஓமன் ஏர்’ நிறுவனத்தில் துணை விமானிக்கான பயிற்சியில் இருந்தபோதே, அல் ஹம்மாமியிடம் தீவிரவாதக் கருத்துகள் சார்ந்த பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை விமான நிறுவனத்திலிருந்து முழுமையாக நீக்குவதற்குப் பதிலாக, நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ஒருவர், பின்னர் எவ்வாறு ‘ஃப்ளை-துபாய்’ நிறுவனத்தில் விமானம் இயக்க அனுமதி பெற்றார் மற்றும் இஸ்ரேல் செல்லும் விமானத்தில் முதல் அதிகாரியாக (துணை விமானியாக) இடம்பெற்றார் என்பது குறித்து விசாரணையாளர்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை அல் ஹம்மாமி கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டார். அவர் விசாரணையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் வான்பரப்பில் எங்காவது ஒரு இடத்தில் விமானத்தை வேண்டுமென்றே மோதச் செய்வதே தனது நோக்கம் என்று அவர் கூறினார் என இவ்வழக்கு தொடர்பான தகவல்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles