நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோகோடோ மாநிலத்தில், அதிக பாரம் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மரப் படகு ஆற்றைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இதுவரை 40 இற்கும் மேற்பட்ட உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் காணாமல் போனோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நைஜீரியாவின் நதிப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாதது மற்றும் அதிகப்படியான பாரம் ஏற்றுவது போன்ற காரணங்களால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
