அடுத்தகட்ட மோதலில் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்துவோம் – ஈரான் எச்சரிக்கை

அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார்.

ஈரான் அரச ஒளிபரப்பான IRIB இல் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

ஈரான் தொடர்ச்சியாகத் தனது இராணுவ உத்திகளையும் ஆயுத உற்பத்தியையும் மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர்,

“புரட்சிகர காவல் படையின் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களின் அழிவுச் சக்தி, முந்தைய போர்களில் பயன்படுத்தப்பட்டதை விடப் பல மடங்கு அதிகம்.

மீண்டும் ஒரு போர் வெடிக்குமானால், அனைத்து அம்சங்களிலும் நமது ஆயுதங்கள் கடந்த காலத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிகத் துல்லியத்தன்மை, நீண்ட தூரப் பாயும் திறன் மற்றும் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு கொண்ட அடுத்த தலைமுறை வெடிபொருட்களையும் ஏவுகணைகளையும் ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளதாக ஹோசைன் மொஹெபி
சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles