திலீபனின் நினைவிடத்தில் யாழ். பொலிஸார் அடாவடி! – ஒலிபெருக்கிச் சாதனங்கள் பறிமுதல்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.

நல்லூரில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிப் பகுதியில் திலீபனின் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவேந்தல் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட போதே பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகத் தெரிவித்த பொலிஸார், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்களைப் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதற்குச் சான்று பகிர்வது போலப் பொலிஸாரின் இந்தச் செயற்பாடு அமைந்திருக்கின்றது என்று அவ்விடத்தில் இருந்தவர்கள் தங்களது விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles