சவூதி அரேபியாவின் சீன தயாரிப்பு டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிகள் அறிவிப்பு

சவூதி அரேபியாவின் சீன தயாரிப்பு டிரோனை சுட்டு வீழ்த்தி விட்டோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே கடந்த பெப்ரவரி மாதம் இறுதியில் ஏற்பட்ட மோதல், தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் சவுதியின் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் நடந்ததில் அவை எரிந்து சேதமடைந்தன. இதில் 73 பேர் காயமடைந்தனர்.

இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில், ஏமன் நாட்டில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று கூறும்போது, சவூதி அரேபியா நாட்டினுடைய விங் லூங் 2 என்ற ஆயுதம் ஏந்திய டிரோன் ஒன்றை நாங்கள் தாக்கி அழித்தோம்.

தைஜ் கவர்னரக பகுதியில் மொச்சா என்ற இடத்தில் நடந்த அதிரடி நடவடிக்கையின்போது இந்த டிரோன் முறியடிப்பு நடந்தது என்று தெரிவித்தனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் யாஹியா சரீ கூறும்போது, சவுதி எதிரி படைகளை சேர்ந்த விங் லூங் 2 டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது என கூறினார். இது சீனாவின் விமான போக்குவரத்து கழகத்தின் தயாரிப்பு என கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles