அஜர்பைஜானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் பிரஜை விடுதலை

உளவுப் பார்த்த குற்றச்சாட்டின் கீழ் அஜர்பைஜானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு பிரஜை விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று பாரிஸ் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு ரஷ்ய பெரும் பணக்காரர்கள் மீதான தடைகளை நீக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அஜர்பைஜான் அரசாங்கம் குறித்த பிரெஞ்சு பிரஜையை விடுதலை செய்தது.

தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட , ரஷ்ய உலோகத் தொழிலதிபராள அலிஷெர் உஸ்மானோ மீதான தடைகளை நீக்க பிரான்ஸ் வலியுறுத்தியது.

அதற்கு பிரதியீடாக அஜர்பைஜானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு பிரஜையான ரயனை விடுவிக்க முன்மொழிந்தது.

இதற்கமையவே அஜர்பைஜான் அரசாங்கம் அவரை விடுதலை செய்தது. அத்துடன் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்றொரு பிரஜையை பிற்காலத்தில் விடுவிக்கப்படலாம் எனவும் நம்பிக்கை வெளியடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாஸ்கல் கான்ஃபாவ்ரூக்ஸ் Pascal Confavreux, “ரயனின் பொது மன்னிப்பு, அஜர்பைஜான் அதிகாரிகளுடனான பொறுமையான மற்றும் தீவிரமான உரையாடலின் விளைவாகும்.

இந்த உரையாடலை நாங்கள் தொடர விரும்புகிறோம், மேலும் இது எங்கள் உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு படியைக் குறிக்கிறது,” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles