கனடாவில் மானுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், சட்பரி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 17இல் நடைபெற்ற வீதி விபத்தில் 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு சுமார் 9:15 மணியளவில், நெடுஞ்சாலை 144 சந்திப்பிற்கு மேற்கே உள்ள நெடுஞ்சாலை 17இல், வாகனம் ஒன்று காட்டு மான் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சட்பரியைச் சேர்ந்த 20 வயதான ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டது.

விபத்து தொடர்பாக பொலிஸார் கள ஆய்வுகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை 17இன் கிழக்கு நோக்கிய பாதைகள் சுமார் எட்டு மணி நேரம் மூடப்பட்டிருந்தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles