ரொறன்ரோ மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம்

கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள ‘லேக் ஷோர் போல்வர்ட் வெஸ்ட்’ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

லேக் ஷோர் போல்வர்ட் வெஸ்ட் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ரோடு சந்திப்பு பகுதிக்கு அருகே அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக ரொறன்ரோ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பரிசோதித்ததில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஏற்கனவே உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் ஜான் ரோஸ் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும், எனினும் விபத்துக்கான முழுமையான சூழல் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் ரோஸ், தெரிவித்தார்.

விபத்து நடந்த பகுதி மிகவும் பரந்தது என்பதால், போக்குவரத்து சேவைப் பிரிவு மற்றும் விபத்து மறுசீரமைப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரிவான விசாரணை நடத்த அதிக நேரம் தேவைப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரேனும் இருந்தால், உடனடியாகத் போக்குவரத்து சேவைப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles