சைபீரியாவில் உள்ள பிளேக் (plague) நோய் குறித்த ஆய்வு நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏதுமில்லை என்று ரஷ்யாவின் சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.
இருப்பினும் அந்தப் பெண் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவை வலியுறுத்தியது.
28 வயதான அந்த ஆய்வக ஊழியர், இதுவரை கண்டறியப்படாத காரணத்தால் ஏற்பட்ட நிமோனியா (நுரையீரல் அழற்சி) பாதிப்பால் உயிரிழந்தார் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோரிடையே சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் இந்த சூழல் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் விரிவான விவரங்களை வெளியிடவில்லை.
