யாழில் ஹெரோயினுடன் நால்வர் கைது!

யாழ். நகரை அண்மித்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடினர் என கூறப்படும் நால்வர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 390 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. )

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles