மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் காலமானார்!

மூத்த அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.

இலங்கையின் இனப் பிரச்சினை, அரசியல் யாப்பு மாற்றங்கள் மற்றும் தமிழ் அரசியல் சூழல் குறித்து பல்வேறு ஊடகங்கள் மற்றும் கருத்தரங்குகளில் ஆழமான ஆய்வுகளை வழங்கி வந்த அவர், தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துவதில் தீராத பற்றுடன் செயற்பட்டவராவார்.

வயிற்றில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சையின் பின்னர் காலமானார்.

கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக நல்லூரில் அண்மையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்திலும் அவர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles