புளியங்குளம் விபத்தில் தந்தையும் ஒரு வயது குழந்தையும் பலி! தாய் படுகாயம்!!

வவுனியா, புளியங்குளம் – புதூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் ஒரு வயது நிரம்பாத குழந்தையும் உயிரிழந்துள்ளனர். தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புளியங்குளம், சமளங்குளம் பகுதிக்கு நெல் விதைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் குழந்தை ஆகியோரே இந்த விபத்தில் சிக்கினர்.

புளியங்குளம், புதூர் 207 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்த முயற்சித்தபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அந்தப் பகுதியில் வழியாகச் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் புளியங்குளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி தந்தையும் குழந்தையும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தாயார் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்களில் இருவர், விபத்தைக் கண்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் மரணமடைந்த குழந்தை இம்மாதம் 23ஆம் திகதி தனது முதலாவது அகவையைப் பூர்த்தி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்தச் சம்பவம் குறித்துப் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles