தேர்தல் முடியும் வரை ஈரான்மீது கைவைக்க மாட்டேன்: ட்ரம்ப் உறுதி

ஈரானுடனான ஆறு மாதகால போரை முடிவுக்குக் கொண்டுவர பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதியளித்துள்ளார்.

இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,

“ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் நாங்கள் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு நேரத்திலும் ஈரான் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்தப் போர் தொடங்கியது. இது ஜனாதிபதி டிரம்பின் உள்நாட்டு ஆதரவு விகிதத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளதுடன், வரும் நவம்பர் தேர்தலில் தங்களின் சிறிய அளவிலான பெரும்பான்மையைத் தக்கவைக்கப் போராடும் குடியரசுக் கட்சியினருக்குப் பெரும் சுமையாகவும் மாறியுள்ளது.

ஈரான் அணுஆயுதங்களை உருவாக்க முயல்வதாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நட்பு நாடுகள் நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இக்குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles