சவூதி அரேபியாவிற்கான பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா வலியுறுத்து

சவூதி அரேபியாவிற்கான பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மத்தியகிழக்கில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த தனது புதிய அறிவிப்பில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), ஜித்தா, தம்மாம் நகரங்களுக்கும், மதீனா சர்வதேச விமான நிலையத்தைத் தவிர சவூதி அரேபியாவில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.

ஒக்ரோபர் 10 அன்று ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, நிலைமை பாதுகாப்பாகும் வரை விமான நிலையத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவை விட்டு வெளியேற விரும்பும் பிரித்தானிய குடிமக்கள், விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பு, பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் அல்லது ஜோர்டான் ஆகிய நாடுகளுக்குத் தரை வழியாகப் பயணம் செய்வதைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஜூலை 13 முதல் சவூதி அரேபியா மீது ஹூதிகளின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக FCDO எச்சரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles