அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி!

அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்களும் ஓர் ஆசிரியரும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன், ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரிகான் மாநிலத்தின் பெண்ட் நகரில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 05, 08 மற்றும் 11 வயதுகளுடைய மூன்று சிறுவர்களும், 54 வயதுடைய ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதேவேளை, காயமடைந்த 07 வயது சிறுவனும் மற்றுமொரு ஆசிரியரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, பூட்டப்பட்டிருந்த கதவுகளைச் சுட்டு உடைத்து உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தினார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, அவரைப் பின்தொடர்ந்து சென்று ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசி ஒருவர் துப்பாக்கிதாரியைச் சுட்டுக் கொன்றதாகவும், இதன் மூலம் மேலும் பலர் உயிர் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles