வெடிகுண்டு மிரட்டால் பல்கேரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஒஸ்ட்ரியத் தலைநகர் வியன்னா நோக்கிப் பயணித்த ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த விமானம் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பல்கேரிய போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன.

மொத்தம் 51 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 57 பேருடன் பயணித்த எயார்பஸ் ஏ320 ரக விமானம், டெல் அவிவிலிருந்து மாலை 6:40 க்கு வியன்னா நோக்கிப் புறப்பட்டது.

ரோமேனிய எல்லையை ஒட்டிய வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, வெடிகுண்டு அபாயம் குறித்தான எச்சரிக்கை சமிக்ஞை விமானக் குழுவினருக்குக் கிடைத்ததை அடுத்து, உடனடியாக விமானத்தை சோஃபியாவுக்குத் திருப்ப முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்கேரிய விமானப் படையின் போர் விமானம் ஒன்று அந்தப் பயணிகள் விமானத்தைப் பாதுகாப்பாக சோஃபியா விமான நிலையத்தில் தரையிறங்கும் வரை வழிநடத்திச் சென்றது.

இரவு 9:25 அளவில் விமானம் சோஃபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும், அதிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles