சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் ஏவுகணைகளை வீடியோ எடுக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுரை

சவுதி அரேபியாவில் வசிக்​கும் இந்​தி​யர்​கள் ஏவுகணைகள், ரோன்​களை வீடியோ, புகைப்​படம் எடுக்க வேண்டாம் என்று இந்​திய தூதரகம் கண்​டிப்​புடன் அறி​வுறுத்தி உள்​ளது. சவுதி அரேபியா​வுக்​கும் ஏமன் நாட்​டின் ஹவுதி கிளர்ச்சிப் படைக்​கும் இடையே தீவிர போர் நடை​பெற்று வருகிறது.

ஹவுதி படை​யின் தலைநக​ரான சனா மற்​றும் ராணுவ தளங்​கள் மீது சவுதி அரேபிய ராணுவம் தொடர் தாக்​குதல்​களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி​யாக சவுதி அரேபியாவின் விமான நிலை​யங்​கள், எண்​ணெய் வயல்​களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிப் படை ஏவு​கணைகள், டிரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. சவுதி அரேபிய எல்​லைக்​குள் நுழையும் ஏவுகணைகள், டிரோன்​களை சிலர் வீடியோ, புகைப்​படம் எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வரு​கின்​றனர்.

இது​தொடர்​பாக சவுதி அரசு தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வருகிறது. அந்த நாட்​டின் பாது​காப்​புத் துறை நேற்று மீண்​டும் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஏவு​கணைகள், டிரோன்​களை வீடியோ, புகைப்​படம் எடுத்​தால் சட்​டரீதி​யாக கடும் நட​வடிக்கை எடுக்​கப்​படும்” என்று எச்​சரிக்​கப்​பட்டு உள்​ளது.

என்ன வகை​யான தண்​டனை வழங்​கப்​படும் என்​பது குறித்து சவுதி அரசு விளக்​கம் அளிக்​க​வில்லை.

எனினும் அந்த நாட்டு அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “ஏவுகணைகள், ட்​ரோன்​களை வீடியோ, புகைப்​படம் எடுத்​தால் தீவிர​வாத தடுப்பு சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​படுவார்​கள். அதிகபட்ச அபராதம் விதிக்​கப்​படும். வெளி​நாட்​டினர் வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்​டால் சவூதி​யில் இருந்து வெளியேற்​றப்​படுவார்​கள்” என்று தெரி​வித்​துள்​ளது.

இந்த சூழலில் சவுதி அரேபியாவின் எச்​சரிக்கை அறி​விப்பு, ரியாத்தில் உள்ள இந்​திய தூதரகத்​தின் சமூக வலை​தளத்​தில் பகிரப்​பட்டு உள்​ளது. அதோடு இந்​திய தூதரகம் வெளி​யிட்ட பதிவில், “சவூதி அரேபியாவில் வசிக்​கும் இந்​தி​யர்​கள் ஏவுகணைகள், டிரோன்​களை வீடியோ, புகைப்​படம் எடுக்க வேண்டாம். சவுதி​யின் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு நடக்க வேண்டும்” என்று அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles