உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி!

உக்ரைனின் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பும் எதிராளிகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், மத்திய உக்ரைன் மாகாணத்தில் உள்ள டினிப்ரோ ரயில் நிலையம் மீது வியாழக்கிழமை ரஷ்ய படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.

மக்கள் கூட்டம் நிரம்பிய இடத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர் என உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், டினிப்ரோவில் இருந்து ஜபோரிஷியா செல்லும் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளைக் குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும், இந்தத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகப் போா் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles