எரிமலை பாறை சரிந்து விழுந்ததில் துருக்கியில் மூவர் மரணம்!

துருக்கியின் கப்படோசியா Cappadocia பகுதியில் எரிமலைப் பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.

இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய கனமழையே இந்த சரிவைத் தூண்டியிருக்கலாம் என்று ஆளுநர் ஹுசைன் கோக் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் துருக்கி நாட்டவர்கள் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

அவசர மீட்புக் குழுக்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரிந்து விழுந்த பாறைக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களையும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles