பிரிட்டனுக்குள் அகதிகள் குடியேற புதிய பாதுகாப்பான வழிமுறை அறிவிப்பு!

பிரிட்டனில் குடியேற புதிய பாதுகாப்பான மற்றும் சட்டபூா்வமான வழிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆங்கில கால்வாயில் சிறிய படகுகள் மூலம் அகதிகள் ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில், இந்தியா்கள் உள்பட பல்வேறு நாட்டு அகதிகள் பிரிட்டனில் குடியேற புதிய பாதுகாப்பான மற்றும் சட்டபூா்வமான வழிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய எல்லைப் பாதுகாப்பு, அகதிகள் விவகாரத் துறை அமைச்சா் அன்னா டா்லி, ‘இப்புதிய திட்டம் முதல்கட்டமாக இந்தியா, வங்கதேசம், எகிப்து, கென்யா, மலேசியா, பாகிஸ்தான், உகாண்டா ஆகிய 7 நாட்டவா்களுக்குச் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தாா்.

இப்புதிய திட்டத்தின்கீழ் தோ்வாக, அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்பதுடன், ஒக். 1இற்கு முன்பு ஐ.நா. அகதிகள் ஆணையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் அகதிகளின் வருகை அடுத்தாண்டு இலையுதிா் காலத்தில் (மாா்ச்) தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles