ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா இன்னும் முடிவெடுக்கவில்லை – ரூபியோ

அமைதிப் பேச்சுவார்த்தை சுணக்கமடைந்திருக்கும் நிலையில், ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அதனைத் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டாவில் நடைபெற்ற G20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைப்பட்டால் அமெரிக்காவால் தனது இராணுவ இலக்குகளை அடைய முடியும் என்றார்.

இருப்பினும், ஈரான் விவகாரத்தில் போரை விட, தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதையே அதிபர் டோனல்ட் ட்ரம்ப் விரும்புவதாக ரூபியோ குறிப்பிட்டார்.

அவ்வகையில், ஈரான் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.

என்றாலும், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் அனைத்துலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles