Sangathy
News

பல மாகாணங்களில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

 

Colombo (News 1st) சபரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(23) காலை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் காற்று மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோமீட்டர் வரையான வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Wimal questions JVP’s deafening silence over CIA Chief’s visit

Lincoln

கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடப்படவுள்ளது

Lincoln

Bad weather to continue for several days

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy