Sangathy
News

செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்; 9 பேர் பலி

Serbia: செர்பியாவின் தலைநகர் Belgrade-இல் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Belgrade-இல் உள்ள  Vladislav Ribnikar எனும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவர் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

செர்பியாவில் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட பின்னர், குறித்த மாணவர் தாமாகவே பொலிஸாருக்கு அழைப்பு மேற்கொண்டு, தகவல் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் ஒரு மாதத்திற்கு முன்பே தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் இலக்கு வைக்கும் சிறுவர்களின் “பட்டியலை” எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2009 இல் பிறந்தவர்கள் – அதாவது சம்பவத்தின் போது அவர்களுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், செர்பியாவில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Related posts

ரஷ்யா முன்வைத்த இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த பிரேரணை நிராகரிப்பு

John David

Lankan refugees in Vietnam appeal: “Don’t send us back home”

Lincoln

Thico scam: Police receive 12 complaints

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy