Sangathy
News

ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக மேம்படுத்த திட்டம்

Colombo (News 1st) ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபவிருத்தி செய்வதற்கு துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனுடாக பொலன்னறுவை, சிகிரியா, அனுராதபுரம், தம்புள்ளை உள்ளிட்ட இடங்களை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுவதனூடாக பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும் அவர் கூறினார்.

ஹிங்குராங்கொடை விமான நிலையத்தில் குறைந்தபட்சம் A330 ரக விமானத்தை தரையிறக்குவதற்கு மற்றும் பறக்கச்செய்வதற்கு தேவையான சில பிரதான அபிவிருத்திப் பணிகள் விரைவாக செய்யப்பட வேண்டும் என விமான சேவைகள் அமைச்சர் கூறினார்.

தற்போது 2287 மீட்டர் நீளமாக காணப்படும் விமான ஓடுபாதையை 2800 மீட்டர் வரை நீடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

Belarus, Lanka discuss ways to promote business contacts

Lincoln

கடற்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 13 தமிழக மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுதலை

John David

China’s cosmic ambitions as seen from the skies

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy