Sangathy
News

Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று(11) ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று(10) 24 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. 10 அலுவலக ரயில்கள், 6 தபால் ரயில்கள் மற்றும் தூரசேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று(10) சில ரயில் சேவைகள் தாமதமானதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்துள்ளார். ரயில்வே வணிக பிரதி பொதுமுகாமையாளர் பதவிக்கு ஊழல்வாதி என தெரிவிக்கப்படும் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம்(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் ரயில் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

Colombo (News 1st) தாக்குதலுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவ​ளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல நேற்று(10) பிற்பகல் வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பத்தரமுல்லை, கொஸ்வத்தை சமகி மாவத்தை பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு வாகனங்களில் வந்த கடுவளை முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பியத் நிகேஷல தெரிவித்திருந்தார்.

தாம் மாலபேயிலிருந்து கொஸ்வத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது பியத் நிகேஷல தம்மை அனர்த்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக இது தொடர்பில் வினவிய போது கடுவளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன தெரிவித்தார்.

அதன்போது தாம் பியத் நிகேஷலவை அடையாளம் காணவில்லை எனவும் தான் போராட்டக்கள உறுப்பினர் என தெரிவித்து தம்மை தூற்றியதாகவும் முன்னாள் பிரதி மேயர் கூறினார்.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது காயங்களுக்குள்ளான சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடுவளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன சந்தேகத்தின் பேரில் நேற்று(10) கைது செய்யப்பட்டார்.

முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

Lanka rapidly becoming authoritarian state – IRES

Lincoln

New Turkey earthquake leaves three dead and people trapped under rubble in Hatay

Lincoln

MIKTA envoys gathering for ‘Cooperation for Resilience in Public Health Sector’ with Health Minister

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy