Sangathy

Sangathy

ஜா-எலயில் பணம் கோரி முச்சக்கரவண்டி சாரதி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Colombo (News 1st) ஜா எல – சுதுவெல்ல பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – பமுனுகம வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் ஏறிய மூவர், சாரதியிடம் தொலைபேசியையும் பணத்தையும் கோரி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி ராகமை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: