Sangathy

Sangathy

ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Colombo (News 1st) சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(23) அதிகாலை பயணமானார்.

இந்த விஜயத்தின் போது சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் K.சண்முகம் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கான ஒரு நாள் விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி நாளை(24) ஜப்பானுக்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பான் பிரதமர் Fumio Kishida உள்ளிட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பான் – இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு பேரவை, ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சபை மற்றும் ஜப்பான் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவற்றுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

 

Leave a Reply

%d bloggers like this: