Sangathy

Sangathy

அலி சப்ரி ரஹீமினால் கொண்டுவரப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அரசுடைமை

 

Colombo (News 1st) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று(23) முற்பகல் துபாயிலிருந்து நாடு திரும்பிய போது, தங்க பிஸ்கட்கள் மற்றம் கையடக்க தொலைபேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: