Sangathy
மரண அறிவித்தல்

அமரர் நாகம்மா நடராஜா

பிறப்பு01 SEP 1945, இறப்பு07 JUN 2020

வயது 74

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) யாழ்ப்பாணம், Sri Lanka கொழும்பு, Sri Lanka கனடா, Canada

திதி: 06-06-2023

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா நடராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து மூன்று ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்

சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை – வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திரு செல்லப்பா விஜயசுந்தரம் (விஜயபதி)

John David

அமரர் அருள்தாசன் யேசுதாசன் (அருள், ஜோன்சன்)

Lincoln

திரு கதிர்காமு பாலசுந்தரம் (பாலன்)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy