Sangathy
News

அனைத்து வைத்தியசாலைகளுக்கும் விசேட வழிகாட்டல் கோவை

Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய வழிகாட்டல் கோவையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு பரவாது தடுப்பதே இதன் அடிப்படை நோக்கம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயாளர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கான சிகிச்சை வழங்குதல், காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் குருதி மாதிரிகளை பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடங்கலாக புதிய வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 46200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 10232 நோயாளர்களும் கொழும்பில் 9906 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Related posts

Sri Lanka has potential to benefit and learn from closer engagement with Vietnam

Lincoln

IMF தொடர்பாக இன்று வாக்கெடுப்பு

Lincoln

நிதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy