Sangathy
News

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

Colombo (News 1st) மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த வாரமும் எதிர்வரும் வாரமும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய மட்டத்திலும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்திலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாட்டில் கடந்த 3 வாரங்களில் 7069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46473 ஆக உயர்வடைந்துள்ளது.

6 மாவட்டங்களின் 67 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி, குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த டெங்கு அபாய நிலைமை காணப்படுகின்றது.

இதனிடையே, அடுத்த மாதம் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் நிலைமை காணப்படுவதன் காரணமாக டெங்கு அபாயம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

Customs seizes Rs 85 Mn worth illicit fags from China

Lincoln

Kurundi Viharaya belies Tamil homeland theory, says Udaya

Lincoln

Champika claims highest tower in South Asia a white elephant

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy