Sangathy
News

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது தொடர்பான யோசனையை ஆலோசிக்க திட்டம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்யும் யோசனை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்  ஜனக வக்கும்புர கூறுகின்றார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பான யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான யோசனை பாராளுமன்ற தெரிவுக் குழுக்களினூடாக முன்வைக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர்  ஜனக வக்கும்புர  தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற விசேட கட்டளைகள் சட்டமூலத்தின் ஊடாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

தமது பணிளை முன்னெடுத்து செல்வதில்  வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர்  அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர்  ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Related posts

Saddharathana Thera re-remanded

Lincoln

மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பரவும் தோல் கழலை நோய் – கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்

Lincoln

Govt. receives 400,000 complaints about Aswesuma

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy