Sangathy
News

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்

Colombo (News 1st) புனித ஹஜ் பெரு​நாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும் பங்கேற்பும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கிய அந்த கஷ்டங்களைச் சமாளித்து நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவை மிகவும் சாதகமான காரணங்களாக அமைந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறுகிய பாகுபாடுகளை தவிர்த்து, நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்கு இன்றைய ஹஜ் பண்டிகையின் போது அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன, தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

சமத்துவம் மற்றும் நல்வாழ்வை கட்டியெழுப்புவதற்கு ஹஜ் பெருநாள் முக்கியத்துவம் வழங்குவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துரதிர்ஷ்ட நிலைகள் மாறி, இருள் அகன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு ஹஜ் பண்டிகையின் போது பிரார்த்தனை செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் பெறுமதியை மேலும் வலுப்படுத்தவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் ஹஜ் பெருநாள் வழிசமைப்பதாக எதிர்கட்சித் தலைவர் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Related posts

ATA is a continuation of PTA in more repressive form – Prof. Uyangoda

Lincoln

Land deeds distributed among 197 families in the North

Lincoln

Police entering universities: Susil calls for investigation

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy