Sangathy
News

அரச அங்கீகாரத்துடன் நவம்பரில் மலையகம் – 200 விழா

Colombo (News 1st) மலையகம் – 200 எனும் விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மலையகத் தமிழர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்களது கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலும் விழாவொன்று நடத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அரச அங்கீகாரத்துடன்  மலையகம் – 200 விழாவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும், நிகழ்வின் இறுதி அம்சங்கள் கொழும்பிலும் நடத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Measures to promote English as a national language

Lincoln

கனேடியர்களுக்கான விசாக்களை இந்தியா இடைநிறுத்தியுள்ளது

Lincoln

COPE raises LRC’s failure to collect Rs 2 bn, lawyer drawing two salaries

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy