Sangathy
News

சீன வௌிவிவகார அமைச்சர் Qin Gang பதவி நீக்கம்

Chi​na: சீனாவின் வெளிவிவகார அமைச்சர் Qin Gang பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த மாா்ச் 12-ஆம் திகதி  வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற Qin Gang, கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவா் என்று கூறப்படுகிறது.

இதனால், அவருக்கும் அதிபா் Xi Jinping-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாகவே முக்கிய நிகழ்ச்சிகளில் Qin Gang  ஓரம் கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வெளிவிவகார அமைச்சா் பதவியில் இருந்து அவா் விலக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக  ஏற்கெனவே வெளிவிவகார அமைச்சராக இருந்த Wang Yi நியமிக்கப்படுவதாகவும் நேற்று (25) அறிவிக்கப்பட்டது.

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வெளிவிவகார அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) உள்ளிட்டோா் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டு, நாடு திரும்பியுள்ள நிலையில்,  Qin Gang பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

Women and children the most affected by Lanka’s economic crisis – ESCAP

Lincoln

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்; 62 கைதிகள் கைது

John David

Taliban attack on Afghan government compound kills 10, wounds dozens

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy