Sangathy
News

சமனல வாவியிலிருந்து உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகிக்கப்பட்டால் தென் மாகாணத்தில் 3 மணி நேர மின்​வெட்டு அமுலாகும் – இலங்கை மின்சார சபை

Colombo (News 1st) உடவளவ நீர்த்தேக்கத்திற்கு சமனல வாவியிலிருந்து நீர் விநியோகிக்கப்படுமானால், தென் மாகாணத்தில் 3 மணித்தியால மின்​வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை இதனை குறிப்பிட்டுள்ளது.

தமது பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை விநியோகிக்குமாறு கோரி விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டங்களை கருத்திற்கொண்டு அமைச்சர் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சமனல வாவியிலிருந்து உடவளவ நீர்த்தேக்கத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விவசாய, மகாவலி, நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் அமைச்சர் இங்கு கலந்துரையாடினார்.

அவ்வாறு நீர் வழங்கப்படுமானால், தற்போதுள்ள நீர் மட்டம் மேலும் குறைவடைவதன் காரணமாக தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

நிலவும் நீர் பிரச்சனை காரணமாக எதிர்வரும் வாரத்திற்குள் நெல் அறுவடையில் 16.81 பில்லியன் ரூபா மற்றும் மின்சார உற்பத்தி தடைப்படுவதால் 1.6 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக சுமார் 30 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படக்கூடும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இவ்வருட அரிசி உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என விவசாய அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

Tryon and de Klerk’s 124-run stand scripts South Africa’s turnaround win

Lincoln

Modern English Culture

Lincoln

Joint food security assessment by govt., FAO, WFP next month

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy