Sangathy
News

மின் கட்டண பட்டியல் விவகாரம் தொடர்பில் தகவல் கோரி மின்சார சபைக்கு நாமல் ராஜபக்ஸ தரப்பில் கடிதம்

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் ஒருங்கிணைப்பு செயலாளரினால் இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு  கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸவின் திருமணத்தின் போது செலுத்தப்படாத மின் கட்டணம் தொடர்பாக இலங்கை மின்சார சபை வழங்கிய  பட்டியல் தொடர்பில் கடிதத்தில் தகவல் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் கடிதம் பகிரப்பட்டு வரும் நிலையில், அவ்வாறானதொரு பட்டியல் மின்சார சபையினால் வழங்கப்பட்டதா என கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அவ்வாறு மின் கட்டணப் பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருக்குமாயின், அது யாருடைய பெயருக்கு, எப்போது, எந்த முகவரிக்கு வழங்கப்பட்டது எனவும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த மின் கட்டணப் பட்டியல் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குமாறு அந்த கடிதத்தின் ஊடாக நாமல் ராஜபக்ஸ சார்பில் அவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்: வர்த்தமானி வௌியீடு

Lincoln

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவிப்பு

Lincoln

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் மீது தாக்குதல்; மாணவர்கள் இருவர் கைது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy