Sangathy
News

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வௌ்யிட்டுள்ளது.

தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக Daily Mirror பத்திரிகையின் முதற்பக்கத்தில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர்  தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர் திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட  மவ்பிம மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜயவீர, மவ்பிம மக்கள் கட்சியை பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் யாப்பு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் வியத்மக அமைப்பிற்கு இணையாக புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதுடன், கல்விமான்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும்  Daily Mirror பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மவ்பிம மக்கள் கட்சியும் திலித் ஜயவீரவின் அமைப்பும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் மவ்பிம மக்கள் கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட தலைவர்  ஹேமகுமார நாணயக்கார, குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த செய்தி குறித்து தொழிலதிபர் திலித் ஜயவீர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Daily Mirror பத்திரிகையின் நண்பர்களே, இங்குள்ள தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கம் தவறாக வழிநடத்துகிறது. தயவுசெய்து என்னை அழைக்கவும், நான் உங்களுக்கு சரியான விடயங்களை வழங்குகின்றேன்.

என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

US Ambassador congratulates Sri Lanka ‘on this momentous occasion’

Lincoln

A change of government can only be brought about through a parliamentary election – President

Lincoln

கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து : 3 சிறுவர்கள் உள்பட ஜவர் பலி..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy